Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர் ஷங்கரைத் திட்டி ட்வீட் போடும் ராம்சரண் ரசிகர்கள்… என்ன காரணம்!

vinoth
வியாழன், 1 பிப்ரவரி 2024 (07:25 IST)
இயக்குனர் ஷங்கர் ராம்சரண் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் நடிக்கும் கேம்சேஞ்சர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார். இந்த படத்துக்காக கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதித் தந்துள்ளார்.  இந்த படத்தின் ஷூட்டிங் பெருமளவுகு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட படம் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

அதற்குக் காரணம் இயக்குனர் ஷங்கர் இந்தியன்  படத்தையும் அடுத்தடுத்து இயக்கி வருவதுதான். இந்தியன் 2 இப்போது மூன்றாவது பாகமும் வர இருப்பதால் மேலும் அந்த படத்தின் ஷூட்டிங் நாட்கள் அதிகமாகியுள்ளன. இதனால் கேம்சேஞ்சர் படத்தை முடிப்பதில் இன்னும் தாமதம் ஆகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படம் தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்னமும் எந்தவொரு அப்டேட்டும் கொடுக்கப்படவில்லை. இதனால் கடுப்பான ராம்சரண் ரசிகர்கள் இப்போது எக்ஸ் தளத்தில் #Irresponsibleshankar என்ற ஹேஷ்டேக்கோடு தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி திட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சர்தார் 2’ படத்தின் 3 நிமிட வீடியோ.. மாஸ் ஆக்சன் காட்சிகள்..!

’மேலிடத்து உத்தரவு’.. தனுஷுக்கு எதிராக அறிக்கை வெளியிட்ட ஃபைவ் ஸ்டார் நிறுவனம்..!

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது? புதிய கோமாளிகள் பங்கேற்பார்களா?

கிளாமர் இளவரசி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments