Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கமல்ஹாசன் தயாரிப்பில் வேலு நாச்சியார் கதையில் நடிக்கிறாரா ஸ்ருதிஹாசன்?

கமல்ஹாசன் தயாரிப்பில்  வேலு நாச்சியார் கதையில் நடிக்கிறாரா ஸ்ருதிஹாசன்?

vinoth

, புதன், 31 ஜனவரி 2024 (09:56 IST)
தமிழ் நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஸ்ருதிஹாசன் முதலில் நடிகையாக அறிமுகமானது இந்தி சினிமாவில்தான். அதன் பின்னர் ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ஆனால் ஸ்ருதிஹாசனை தெலுங்கு சினிமாவே மிகப்பெரிய ஸ்டார் நடிகை ஆக்கியது. தெலுங்கில் அறிமுகம் ஆனதில் இருந்தே நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் அவர் தெலுங்கில் சலார் படத்தில் நடித்திருந்தார். தமிழில் கடைசியாக அவர் லாபம் படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் அவர் வேறு எந்த தமிழ் படத்திலும் கமிட்டாகவில்லை. இந்நிலையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் வேலுநாச்சியார் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தை கமல்ஹாசனின் தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் எம் செல்வா இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. படம் குறித்த அதிகாரப்பூர்வதகவல் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தக் லைஃப் பட ஷூட்டிங்குக்காக ரஷ்யா செல்லும் படக்குழு!