Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இராமாயணம் இரண்டு பாகங்களும் சேர்ந்து 4000 கோடி ரூபாய் பட்ஜெட்டா?... தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்!

vinoth
செவ்வாய், 15 ஜூலை 2025 (10:45 IST)
பாலிவுட் இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் மூன்று பாகங்களாக உருவாகும் ராமாயணம் சம்மந்தப்பட்ட படத்தில் ராமன் வேடத்தில் ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும்  ராவணன் வேடத்தில் கேஜிஎஃப் புகழ் யாஷும் நடிக்க, அனுமன் வேடத்தில் சன்னி தியோலும், சூர்ப்பனகை வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங்கும், கைகேயியாக லாரா தத்தாவும் நடிக்கின்றனர்.

இந்த படத்தை நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் மற்றும் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன.  இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் ரன்பீர் கபூர் மற்றும் சாய்பல்லவி ஆகியோரின் காட்சிகள் படமாக்கப்பட்டன. அதையடுத்து யாஷ் சம்மந்தமானக் காட்சிகள் படமாக்கப்பட்டன.

முதல் பாகத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் முதல் பாகம் 2026 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் நமீத் மல்ஹோத்ரா சமீபத்தில் அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் “இந்த படத்துக்காக நாங்கள் யார் பணத்தையும் எடுத்துக்கொள்ளவில்லை. எங்கள் பணத்தையே முதலீடு செய்துள்ளோம். சில பெரிய பட்ஜெட் ஹாலிவுட் படங்களை ஒப்பிடும்போது இந்த படங்களுக்குக் குறைவான தொகையே பட்ஜெட்டாக இருக்கும். இரண்டு பாகங்களும் சேர்ந்து முடியும் போது 4000 கோடி ரூபாயாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லோக்கி என்ன பண்ணி வெச்சுருக்க? மகிழ்ச்சியில் கட்டியணைத்த ரஜினி! - கூலி படம் இன்னொரு தளபதியா?

மறைந்த நடிகை சரோஜாதேவியின் கண்கள் தானம்!

அமீர்கானுடன் சூப்பர் ஹீரோ படம்… முதல் முறையாகப் பகிர்ந்த லோகேஷ்!

ட்ரைலர் கிடையாதா? நேரா படம் ரிலீஸா?… கூலி படம் குறித்து லோகேஷ் கொடுத்த அப்டேட்!

அஜித் அடுத்த படத்தை இயக்குவது தனுஷா? கார்த்திக் சுப்புராஜா? பொய் மூட்டைகளை அவிழ்த்து விடும் யூடியூபர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments