Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

Advertiesment
யாஷ் தயாள்

vinoth

, வியாழன், 10 ஜூலை 2025 (10:46 IST)
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இடது கை வேகப் பந்துவீச்சாளரான யாஷ் தயாள் ஐபிஎல் தொடர் மூலம் கவனம் ஈர்த்து இந்திய அணிக்குத் தேர்வானார். முதலில் குஜராத் அணிக்காக விளையாடிய அவர், அதன் பின்னர் பெங்களூரு அணியால் வாங்கப்பட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வரும் அவர் இந்த ஆண்டு ஆர் சி பி அணி கோப்பையை வெல்ல முக்கியக் காரணங்களில் ஒன்றாக இருந்தார். இந்நிலையில் அவர் மேல் ஒரு பெண் பாலியல் புகார் சுமத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்து தன்னைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் இப்போது திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார் என்று சம்மந்தப்பட்ட பெண் புகாரளிக்க, காவல்துறையினர் இப்போது யாஷ் மீது பிரிவு 69-ன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து அவர் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் தன் மேல் புகாரளித்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மேல் யாஷ் தயாள் காவல்நிலையத்தில் மோசடி புகார் சுமத்தியுள்ளார். அதில் “சில ஆண்டுகளுக்கு முன்னர் அந்த பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கமேற்பட்டது. அவருடன் பழகினேன். அவர் என்னிடம் இருந்து தனக்கு மற்றும் தன்னுடைய குடும்பத்தினரின் மருத்துவ செலவுக்கு எனப் பணம் பெற்றார். அதை திருப்பித் தரவேயில்லை. மேலும் அந்த பெண் என்னுடைய ஐபோன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றைத் திருடிவிட்டார். என் பணத்தில் ஷாப்பிங் செய்து பல லட்ச ரூபாயை மோசடி செய்துள்ளார். அவர் மற்றும் அவர் குடும்பத்தினர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என யாஷ் தயாள் தாக்கீது செய்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!