ஹாலிவுட் படங்களில் ஜேம்ஸ் பாண்ட் பட சீரிஸை பெரும்பாலான மக்கள் ஏற்கொண்டு கொண்டாடினர். இதுவரை வெளியான ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் ஜார்ஜ் லேசன்பை, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ் பிரோஸ்னன் என பிரபலமான நடிகர்கள் நடித்தனர். தற்போது 25 வது ஜேம்ஸ் பாண்ட் படம் நோ டைம் டு டை டேனியல் கிரைக் நடிப்பில் உருவாகியுள்ளது.
இந்த படத்தோடு தான் ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடிக்க போவதில்லை என அவர் அறிவித்திருந்தார். இந்நிலையில் புதிய ஜேம்ஸ் பாண்டாக அடுத்து நடிக்கப் போவது என்பது குறித்த விவாதம் நடந்து வருகிறது. அந்த பட்டியலில் டாம் ஹாலண்ட், ஜேக்கப் எலோர்டி மற்றும் ஹாரிஸ் டிக்கின்சன் ஆகிய இங்கிலாந்தை சேர்ந்த மூன்று இளம் நடிகர்கள் பரிசீலனையில் உள்ளதாக சொல்லப்படுகிறது.
இன்னும் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் யார் என்பதே முடிவாகாத நிலையில் தற்போது பாண்ட் கேர்ள் யார் என்பது குறித்த தகவலும் பரவி வருகிறது. ஹாலிவுட்டின் சமீபத்தைய கனவுக் கன்னியான சிட்னி ஸ்வீனியிடம் ஜேம்ஸ் பாண்ட் படத்தின் கதாநாயகியாக நடிக்கப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தை டூன் பட இயக்குனர் டென்னிஸ் வில்லுவனே இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.