Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் பிரசாந்த் நீல்.. ‘கேஜிஎப்’ யுனிவர்ஸ் திட்டமா?

அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் பிரசாந்த் நீல்.. ‘கேஜிஎப்’ யுனிவர்ஸ் திட்டமா?

Siva

, புதன், 24 ஜூலை 2024 (08:59 IST)
அஜித்தின் அடுத்த படத்தை ‘கேஜிஎப்’ படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்க இருப்பதாகவும் இந்த படம் ‘கேஜிஎப்’ படத்தின் யுனிவர்ஸ் படமாக உருவாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித் நடித்து வரும் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ள நிலையில் அவர் நடித்துவரும் இன்னொரு படமான ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை சிறுத்தை சிவா இயக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி அஜித்தின் 65வது படத்தை ‘கேஜிஎப்’ இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்க இருப்பதாகவும் இந்த படம் ’கேஜிஎப் 3 ’படத்தின் முன்னோட்டமாக பிரசாந்த் நீல் யுனிவர்ஸ் படமாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 இந்த படம் குறித்த பேச்சுவார்த்தை அஜித்திடம் பிரசாந்த் நீல் முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி தொடர்ச்சியாக அஜித் நடிப்பில் உருவாகும் மூன்று படங்களை பிரசாந்த் நீல் இயக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூரிக்காக ஒரே படத்தில் இணைந்து நடிக்கவுள்ள சிவகார்த்திகேயன் & விஜய் சேதுபதி!