Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமராஜனுக்கு ஜோடியாகும் மீனா,.. அடுத்த படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

Webdunia
வியாழன், 1 ஜூன் 2023 (08:05 IST)
80களின் இறுதியிலும் 90 களின் தொடக்கத்திலும் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் மற்றும் விஜயகாந்த் ஆகியவர்களுக்கு இணையாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் ராமராஜன். சைக்கிளில் வந்து அவர் வீட்டில் கால்ஷீட் வாங்கி படம் தயாரித்து கோடீஸ்வரர்களான தயாரிப்பாளர்கள் உண்டு. அந்த அளவுக்கு தயாரிப்பாளர்களின் நடிகராக வலம் வந்த அவர் ஒரு கட்டத்தில் தனது படங்கள் தோல்வி அடைந்ததால் மார்க்கெட்டை இழந்தார். அதைத் தொடர்ந்தும் கிடைக்கும் வாய்ப்புகளில் நடிக்காமல் நடித்தால் ஹீரோவாகதான் நடிப்பேன் என அடம்பிடித்து வந்த அவர், இப்போது சாமானியன் திரைப்படம் மூலமாக மீண்டும் ரி எண்ட்ரி கொடுக்கிறார்.

இந்த படத்தை தம்பிக்கோட்டை படத்தை இயக்கிய அம்மு ரமேஷ் இயக்க உள்ளார். இந்த படத்தில் ராதாரவி மற்றும் எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் மற்ற முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்துவருகிறது. இப்போது இந்த படம் முடியும் முன்னரே அடுத்த படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார் ராமராஜன்.

புதுமுக இயக்குனர் கார்த்தி என்பவர் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு உத்தமன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாம். இந்த படத்தில் ராமராஜனுக்கு ஜோடியாக நடிக்க மீனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

இதெல்லாம் நடக்குற காரியமாங்க..! ஏ.வி.எம் நிறுவனத்திற்கு எம்.ஜி.ஆர் விட்ட சவால்..!

சினிமால அந்த விஷயத்துல தொடர்ந்து தோத்துட்டேன்.! ஓப்பனாக ஒத்துக்கொண்ட இயக்குனர் சுந்தர் சி..!

சமந்தாவின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

மாளவிகா மோகனனின் கிளாமர் ட்ரஸ் போட்டோஷூட்!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கும் ‘அஞ்சாமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

அடுத்த கட்டுரையில்
Show comments