Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகை நவ்யா நாயர் மருத்துவமனையில் அனுமதி...

Advertiesment
navya nair
, செவ்வாய், 30 மே 2023 (21:44 IST)
மலையாள சினிமாவில் முன்னணி  நடிகை நவ்யா நாயர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகை  நவ்யா நாயர். இவர், இஷ்டம் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். அதன்பின்னர், சதுரங்கம், அழகிய தீயே, மாய கண்ணாடி, ராமன் தேடிய சீதை  உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.


இவர் தற்போது, ஜானகி ஜானே படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் புரமோஷன் பணிக்காக நிறைய இடங்களுக்குச் சென்று வருகிறார்.

இந்த  நிலையில்,  உணவு ஒவ்வாமை பிரச்சனையால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், இந்த நிகழ்ச்சி தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, நடிகை நவ்யா நாயர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த தகவல் பரவலான நிலையில் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை  உறுதிப்படுத்தும் வகையில், நடிகை நவ்யா நாயர் போட்டோவை வெளியிட்டுள்ளார்.

அவர் விரைவில் குணமடைய வேண்டுமென ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரிலீஸுக்கு முன்பே பல கோடி வியாபாரமான ''ஆதிபுரூஷ்''