ராஜமௌலியின் RRR படத்தில் ரகுல் ப்ரீத் சிங்? அதுவும் இப்படி ஒரு காட்சியில்..!

சனி, 30 மே 2020 (14:16 IST)
தென்னிந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனராக உருவாகியுள்ள ராஜமௌலி பாகுபலி படத்துக்குப் பிறகு ராம் சரண் மற்றும் நடிகர் அஜய் தேவ்கன் ஆகியோரை வைத்து ஆர் ஆர் ஆர் என்ற வரலாற்றுப் படத்தை இயக்கி வருகிறார். மேலும் பாலிவுட் நடிகை ஆலியா பட் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கின்றார்.

தெலுங்கு, தமிழ் , இந்தி, கன்னடம் , மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளிவரும் இப்படத்தை காண உலகம் முழுவதும் உள்ள ராஜமௌலியின் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அண்மையில் வெளியான இப்படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோவை தென்னிந்திய சினிமாவே திரும்பி பார்த்தது. நெருப்பு நீர் என வித்யாசமான கான்செப்டில் வெளியான இப்போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது.

இந்நிலையில் இப்படத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுவும் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடிவிட்டு போவாராம். இந்திய சினிமாவின் உச்ச நடிகையாக விளங்கி வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஐட்டம் டான்ஸ் ஆடுகிறாரா..? என அனைவரும் ஷாக்கியுள்ளனர். ராஜமௌலியின் படத்தில் ஒரு குட்டி ரோல் கிடைத்தாலே அது பெரிய அதிஷ்டம் தான்... எனவே  ரகுல் ப்ரீத் சிங் இந்த வாய்ப்பை மிகுந்து மகிழ்ச்சியுடன் ஏற்றுகொண்டிருப்பார் என பேசப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் கார்ஜியஸ் ஏமி ஜாக்சன்... ரிப்பீட் மோட்'ல் ரசிக்க வைக்கும் ரீசன்ட் கிளக்ஸ்!