Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அண்ணா வந்தா Auto Bomb'மு டும்மு... "மாஸ்டர்" ட்ரெய்லர் ரிலீஸ் தேதி!

அண்ணா வந்தா Auto Bomb'மு டும்மு...
, சனி, 30 மே 2020 (12:42 IST)
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டது. விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படத்தில் ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கும் இப்பாடல்கள் அமரோக வரவேற்பை பெற்றுள்ளது. ஆடியோ லான்சிற்கு பிறகு படத்தின் ட்ரைலர் மற்றும் டீஸருக்காக வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்களை கொரோனா வைரஸ் வந்து ஆப் பண்ணிவிட்டது. இதையடுத்து படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளி சென்றுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் அட்லீஸ்ட் ட்ரைலர் அல்லது டீசர் ஆவது வெளியிடுங்களேன் என ஏக்கத்துடன் கேட்டுவந்த அத்தனை ரசிகர்களுக்கும் ஹேப்பி நியூஸ் வந்துடுச்சு..

படத்தை தீபாவளி திருநாளில் வெளியிட படக்குழு முடிவுசெய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், வருகிற ஜூன் 22ம் தேதி விஜய்யின் பிறந்தநாளில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது. இது அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும் உறுதிசெய்யப்பட்ட தகவல் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கூடிய விரையில் படத்தரப்பிடமிருந்து இதற்கான அறிவிப்பு வெளியாகலாம்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுசுபு ஆண்டி... இன்னும் விக் தான் வைக்கிறீங்களா ? ஆசாமிக்கு குஷ்பு பளார் ரிப்ளை!