Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பீஸ்ட் படத்தின் நள்ளிரவு காட்சிகளுக்காக ஏற்பாடு….டிக்கெட் ரேட் இவ்வளவா?

பீஸ்ட் படத்தின் நள்ளிரவு காட்சிகளுக்காக ஏற்பாடு….டிக்கெட் ரேட் இவ்வளவா?
, வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (15:53 IST)
விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் பீஸ்ட் படத்தின்  ரிலீஸ் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சுமார் ஆயிரம் முதல் ஆயிரத்து 50 திரையரங்குகள் வரை இருக்கும் நிலையில் பீஸ்ட் மற்றும் கேஜிஎப் 2 திரைப்படங்கள் அடுத்தடுத்த நாளில் ரிலீஸ் ஆவதால் எந்த படத்திற்கு எவ்வளவு திரையரங்குகள் கிடைத்து உள்ளன என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தளபதி விஜய்யின் பீஸ்ட், திரைப்படத்திற்கு 800 முதல் 850 திரையரங்குகள் கிடைத்துள்ளதாகவும், கே.ஜி.எப்2  படத்திற்கு அதிகபட்சமாக 200 திரையரங்குகளில் மட்டுமே ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பீஸ்ட் படத்துக்காக சிறப்புக் காட்சிகள் எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இந்த சிறப்புக் காட்சிகளில் காலைக் காட்சி மட்டும் இல்லாமல் நள்ளிரவுக் காட்சிகளும் திரையிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் நள்ளிரவுக் காட்சிகளுக்கு சுமார் 2000 ரூபாய் வரை டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Source valaipechu 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லிங்குசாமி படத்தில் சிம்பு… செம்ம அப்டேட் கொடுத்த படக்குழு!