குக்கூ, ஜோக்கர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய ராஜு முருகன், தோழா, மெஹந்தி சர்க்கஸ் ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். அதையடுத்து அவர் ஜீவாவை வைத்து இயக்கியுள்ள ஜிப்ஸி திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இதையடுத்து அவர் கார்த்தியின் 25 ஆவது படமான ஜப்பான் படத்தை இயக்கினார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆன அந்த படம் கார்த்தியின் சினிமா வாழ்க்கையில் மிக மோசமான தோல்வியைப் பெற்றது. ஜப்பான் படத்தைப் பார்த்த ரசிகர்கள் கார்த்தியின் நடிப்பையும், ராஜு முருகனின் திரைக்கதையையும் மோசமாக விமர்சித்தனர்.
இதையடுத்து எப்படியாவது கம்பேக் கொடுக்க வேண்டுமென்பதற்காக இப்போது சசிகுமாரை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை ஜிப்ஸி படத்தைத் தயாரிக்க ஒலிம்பியா பிக்சர்ஸ் சார்பாக அம்பேத்குமார் தயாரிக்கிறார். இந்த படத்துக்கு மை லார்ட் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் லுக் போஸ்டரும் ரிலீஸாகி கவனம் பெற்றுள்ளது.