Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படத்துக்கு தடைவிதிக்கக் கோரி புகார்!

vinoth
வியாழன், 30 ஜனவரி 2025 (13:54 IST)
குக்கூ, ஜோக்கர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய ராஜு முருகன், தோழா, மெஹந்தி சர்க்கஸ் ஆகிய திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். அதையடுத்து அவர் ஜீவாவை வைத்து இயக்கியுள்ள ஜிப்ஸி திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன் பின்னர் கடந்த ஆண்டு வெளியான ஜப்பான் திரைப்படமும் படுதோல்வி படமாக அமைந்தது.

இதையடுத்து எப்படியாவது கம்பேக் கொடுக்க வேண்டுமென்பதற்காக இப்போது சசிகுமாரை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை ஜிப்ஸி படத்தைத் தயாரிக்க ஒலிம்பியா பிக்சர்ஸ் சார்பாக அம்பேத்குமார் தயாரிக்கிறார். இந்த படத்துக்கு ‘மை லார்ட்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் லுக் போஸ்டரும் ரிலீஸாகி கவனம் பெற்றுள்ளது.

இந்த போஸ்டரில் சசிகுமாரும் கதாநாயகியும் அமர்ந்தபடி பீடி புகைப்பது போல வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த போஸ்டர் பெண்களை அவமதிப்பது போல உள்ளதாகக் கூறி ஆர் டி ஐ செல்வம் என்பவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் தொடங்கும் முருகதாஸ்& சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்..!

மம்மூட்டியோடு கைகோர்க்கும் சூர்யா.. விரைவில் வரப்போகும் சூப்பர் அப்டேட்!

மீண்டும் ஒரு காதல் கதை… மணிரத்னத்தின் அடுத்த பட அப்டேட்!

மீண்டும் இணையும் சிம்பு & யுவன் காம்போ…!

தமிழில் பெற்ற வரவேற்பை அடுத்து மலையாளத்தில் டப் செய்யப்பட்டு வெளியாகும் ‘குடும்பஸ்தன்’!

அடுத்த கட்டுரையில்
Show comments