Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லீக் ஆனது ரஜினியின் பேட்ட பட கதை!

Webdunia
புதன், 19 டிசம்பர் 2018 (12:04 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் பேட்ட படத்தின் கதை இணையத்தில் தீயாக பரவி வருகிறது. 



 
சன் பிச்சர் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகிரும் பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடந்துகொண்டிருக்கிறார். இந்த படம் வரும் பொங்கலன்று ரிலீஸ் ஆகவுள்ளது. 
 
சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் பாடல்கள், டீஸர், கதாபாத்திரங்களின் போஸ்டர் என அனைத்தும் படு ஹிட்.  சூப்பர் ஸ்டார் ஈஸ் பேக் என்று பெரும் உற்சாகத்தில் உள்ள ரசிகர்கள் இப்படத்தின் கதை என்னவாக இருக்கும் என்று குழப்பத்தில் இருக்கின்றனர்.
 
இந்நிலையில் பேட்ட  படத்தின் கதை ஆணவக் கொலையை மையப்படுத்தியது என்ற தகவல்கள்  தற்போது இணையத்தில் தீயாக பரவிவருகிறது. 
 
மேலும் சமூக வலைதளங்களில் இதுதான் கதை, அதான் கதை என நிறைய உலா வருகிறது. இப்போதும் அப்படி ஒரு கதை வைரலாகிறது. அதாவது படம் இந்து, முஸ்லீம் இடையே நடக்கும் ஆணவக் கொலை பற்றிய கதை என்று கூறப்படுகிறது. 
 
இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை எனினும், விஜய் நடிப்பில் கடந்த தீபாவளியன்று வெளியான "சர்கார்" படத்தின் கதையும் இப்படித்தான்  ரிலீசுக்கு முன்னரே பரவியது. பிறகு படம் வெளியாகியதும் அதே கதையாக தான் இருந்தது. 
 
ஆக பேட்ட புரளியும்  உண்மையாக இருக்க 50% வாய்ப்புகள் இருக்கிறது என்கிறார்கள் நெட்டிசன்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹாட் & க்யூட்டான உடையில் கலக்கும் ரகுல் ப்ரீத் சிங்!

ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சிம்புவின் ஐம்பதாவது படத்தையும் கைப்பற்றுகிறதா ஏஜிஎஸ் நிறுவனம்?

மீண்டும் காமெடியனாக நடிக்க முடிவெடுத்த சந்தானம்?... அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை!

இசைஞானி இளையராஜா நீதிமன்றத்தில் ஆஜர்? என்ன வழக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments