Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'பேட்ட' படத்தில் சசிக்குமாரின் கேரக்டர் இதுதான்?

'பேட்ட' படத்தில் சசிக்குமாரின் கேரக்டர் இதுதான்?
, திங்கள், 17 டிசம்பர் 2018 (19:02 IST)
பேட்ட படத்தில் சசிகுமாரின் கேரக்டர் வெளியானது !


 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கலன்று வெளிவரவிருக்கும் படம் பேட்ட. படத்தின் ரிலீஸ் தேதிக்காக காத்திருக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த பொங்கல் மிக சிறப்பான பொங்கலாக இருக்குமென தெரிகிறது. 
 
ரஜினியின் தீவிர ரசிகரான இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், சசிகுமார், மகேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கிறார் . 
 
ரஜினியின் 165-வது படமான இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பேட்ட படத்தின் போஸ்டர்கள், பாடல்கள், டீசர் என வெளியான அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. 
 
இப்படத்தில் நடித்துள்ள நடிகர்களின் போஸ்டர்களை கதாபாத்திர பெயரோடு வெளியிட்டது இதன் தயாரிப்பு நிறுவனமான சன் பிச்சர். அந்த வரிசையில்  விஜய் சேதுபதி, நவாஸுதீன், த்ரிஷா ஆகியோரின் கேரக்டர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது நடிகர் சசிக்குமாரின் கேரக்டர் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 
 
பேட்ட திரைப்படத்தில் 'மாலிக்' எனும் கதாபாத்திரத்தில் சசிக்குமார் நடிப்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கதறிய பாட்டிக்கு சூரி கொடுத்த இன்ப அதிர்ச்சி