Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினியின் அடுத்த பட வேலைகள் ஆரம்பம்

ரஜினியின் அடுத்த பட வேலைகள் ஆரம்பம்
, வெள்ளி, 5 ஏப்ரல் 2019 (13:07 IST)
ரஜினி படத்தில் முகம் காட்டினாலே போதும் என்று அவர்கள் ரசிகர்கள் இருந்தனர். அப்போது 3 வருடத்துக்கு ஒரு படம் என்று ரஜினி நடித்துக்கொண்டிருந்தார். ஆனால் கடந்த வருடம் அரசியலில்தான் இருக்கிறேன். நான் எப்போதோ அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று கூறி தன் ரசிகர்களை உசுப்பேற்றினார்.
அதன் பின்னர் கடந்த வருடம் 2.0 என்ற படத்திலும், இந்த வருடம் பொங்கலுக்கு ஒருபடம் என்று தன் ரசிகர்களுக்கு டபுள் டிரீட் கொடுத்தார். இதனால் அரசியல் கட்சி தொடங்காமல் ரஜினி காலம் கடத்தி வருவதாக அவரது ரசிகர்கள் புலம்புகிறார்கள்.
 
இந்நிலையில் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பது உறுதியாகி உள்ளது.இந்தப் படத்தின் வேலைகள் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.
 
இப்படத்திற்கான படப்பிடிப்பு வரும் ஏப்ரம் 10 தேதி மும்பையில் தொடங்க இருப்பதாக தெரிகிறது. இது ரஜினியின் 166 வது படமாகும். இதில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார். சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசியலை கிழித்து தொங்கவிடும் "உறியடி 2" திரைவிமர்சனம்!