நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது ரசிகர்களை சந்தித்து உரையாடி வருகிறார்.
ரஜினிகாந்த் 10 வருடங்களுக்குப் பிறகு, இன்று சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தன்னுடைய ரசிகர்களை சந்தித்து வருகிறார். அப்போது பேசிய ரஜினிகாந்த் “என்னுடைய படங்கள் வெளியாகும் போது, அது வெற்றியடைய மட்டுமே நான் ஏதாவது பேசுகிறேன் என சிலர் பேசுகிறார்கள். எழுதுகிறார்கள். அது உண்மையில்லை. ரசிகர்களின் பேராதரவால் அந்த நிலை எனக்கு ஏற்படவில்லை. ஒரு படம் நன்றாக இருந்தால்தான் வெற்றியடையும். ரசிகர்களை ஏமாற்ற முடியாது.
ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் தமிழர்கள் தொடர்ந்து ஏமாந்து வருகிறார்கள். அதுபற்றி நான் இங்கு பேசவிரும்பவில்லை” என சூசமாக பேசினார்.
அதவாது, அரசியல்வாதிகளிடம் மக்கள் தொடர்ந்து ஏமாறுகிறார்கள் என்பதைத்தான் ரஜினி கூறியிருக்கிறார். அப்படி பார்த்தால் இதுவரை தமிழகத்தில் அதிமுக, திமுக என்ற இரண்டு கட்சிகள்தான் ஆட்சி நடத்தி வந்திருக்கிறது. எனவே, ரஜினிகாந்த் தைரியமாக ஒரு அரசியல் கருத்தை கூறியிருக்கிறார் என அவரின் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.