தான் தயாரித்த படத்தால் நஷ்டத்தை சந்தித்ததாலும், தன்னுடைய சொந்த வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாகவும் பாலிவுட் தயாரிப்பாளர் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
மராத்தி மொழியில் டோல் தசா என்ற படத்தை தயாரித்தவர் அதுல் பி தாப்கிர்(35). இவர் நேற்று ஒரு விடுதியில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன் தன்னுடைய முகநூல் பக்கத்தில், 6 மாதங்களுக்கு முன்பு தன்னை விட்டு பிரிந்து சென்ற தன்னுடைய மனைவி கொடுத்த மன உளைச்சல் காரணமாகவும், தன்னுடைய ‘டோல் தசா’ படத்தால் தானக்கு நஷ்டம் ஏற்பட்டதாலும் தற்கொலை செய்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவரது உடலை கைப்பற்றிய போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது பிரேத பரிசோதனயின் முடிவிற்கு பின் இன்னும் சில உண்மைகள் தெரிய வரலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.