Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமர் கோயிலை பார்வையிட்ட ரஜினிகாந்த் - வைரலாகும் போட்டோ

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (12:53 IST)
அயோத்தியில் கட்டப்பட்டு வரும்  ராமர் கோயிலுக்கு  நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று பார்வையிட்டார்.

ராமஜென்ம பூமியின் பாதுகாப்பு மற்றும் ராமர் கோவில் புனிதத்தை கருத்தில் கொண்டு கோயில் கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

இந்தக் கோயில் கட்டுமானப் பணிகள் முடிந்து எப்போது கோயில் திறக்கப்படும் என்ற ஆர்வம் பக்தர்களிடையே எழுந்த நிலையில் சமீபத்தில், கோயில் திறப்பது குறித்து  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 'வரும்  2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயில் திறக்கப்படும் 'என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் வடஇந்தியாவில் ஆன்மீக பயணம் மேற்கொண்டு வரும்   நடிகர் ரஜினிகாந்த்,  தற்போது உத்தரபிரதேசம் மாநிலத்திற்குச் சென்றுள்ள நிலையில், அம்மாநில ஆளுநர், முதல்வர் யோகி ஆதித்யநாத், அகிலேஷ் யாதவ் ஆகிய தலைவர்களை சந்தித்தார். பின், ராமர் கோயில் கட்டப்பட்டு வரும் இடத்தை  நேற்று,  மாலை  ரஜினிகாந்த் தன் மனைவி லதாவுடன் நேரில் சென்று பார்வையிட்டு, கோயிலில் சுவாமியை தரிசனம் செய்தார்.  இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

இதற்கு முன்னதாக,  கேதார்நாத், பத்ரிநாத், பாபாஜி குகை ஆகிய புனித  தலங்களுக்குச் ரஜினிகாந்த் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இலங்கையில் ‘பராசக்தி’ படப்பிடிப்பு.. கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யாவை சந்தித்த ரவிமோகன்..!

கடலோர பகுதி மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்: ரஜினிகாந்த் வீடியோ

செல்லத்த காட்டாம ஏமாத்திட்டீங்களே! திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்! - சோகத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் 2025: முதல் போட்டியில் பெங்களூரு அபார வெற்றி.. விராத் கோலி அபார பேட்டிங்..!

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments