Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிமுக தேர்தல் ஆலோசனை குழு தலைவராக சவுங்கு சங்கர் நியனம்

Advertiesment
savukku shankar
, சனி, 19 ஆகஸ்ட் 2023 (18:19 IST)
பிரபல யூடியூபராகவும், சவுக்கு மீடியாவை நிர்வகிப்பவரும் பத்திரிக்கையாளராகவும் இருந்து வருபவர் சவுக்கு சங்கர். இவரது அரசியல் கருத்துகளுக்காக அடிக்கடி ட்ரெண்டிங்கிலும் இருந்து வருகிறார்.

இவர்,  பாஜக, திமுக, உள்ளிட்ட கட்சிகளுக்கு எதிராக அதிரடியான கருத்துக்களை கூறி வரும்  நிலையில், இன்று அதிமுகவின் தேர்தல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது.

Voive Of savukku Shankar என்ற சமூக வலைதள பக்கத்தில்,  அதிமுக கட்சி சார்பில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள  அறிக்கையில்,

‘’பாரத தேசத்தின் ‘புதிய பிரதமரை’ முடிவு செய்யும் 2024 நாடாளுமன்றத்தேர்தலை. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்களும் நிர்வாகிகளும் திறம்பட எதிர்கொள்ளும் பொருட்டு, தேர்தல் குழு ஆலோசகராக கழக உறுப்பினர். பத்திரிகையாளர் திரு.சவுக்கு சங்கர் அவர்களை தலைமைக் கழக நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குப்பின் ஏகமனதுடன் நியமனம் செய்கிறேன்.

கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் தேர்தல் குழு ஆலோசகருக்கு அடிபணிந்து, கூட்டணி குறித்து கவலை கொள்ளாமல் 40 தொகுதிகளிலும் தனித்து நின்று வெல்லும் அளவுக்கு திறம்பட செயலாற்றுமாறு தலைமைக் கழகம் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளது.

 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகளிர் உரிமை திட்டம் இந்தியாவின் மிகப்பெரிய பிராடு திட்டம்: அண்ணாமலை