ஜப்பானில் ரிலீஸாகி வசூலில் கலக்கும் ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’!

vinoth
சனி, 13 செப்டம்பர் 2025 (08:33 IST)
ரஜினி நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையன் திரைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸானது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். அனிருத் இசையிக், எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவில் வேட்டையன் படம் உருவானது.

படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸான நிலையில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. படம் பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களைக் கூறினர். இதனால் ரஜினியின் முந்தைய படமான ஜெயிலர் படத்தை விடக் குறைவான வசூலையே வேட்டையன் பெற்றது. கடந்த சில ஆண்டுகளில் மிகக் குறைவான வசூல் செய்த ரஜினி படமாக அமைந்தது.

இந்நிலையில் இப்போது வேட்டையன் திரைப்படம் ஜப்பானிய மொழியில் ’புல்லட்ஸ் அண்ட் ஜஸ்டீஸ்’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டு அங்கு ரிலீஸாகியுள்ளது. அங்கு ரிலீஸான ஒரு வாரத்தில் நான்கு கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளதாகவும் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீல நிற சேலையில் ஆளையிழுக்கும் அழகில் அசத்தும் மிருனாள் தாக்கூர்!

வெண்ணிற சேலையில் ஏஞ்சல் லுக்கில் போஸ் கொடுத்த வாணி போஜன்!

உலகளவில் முதல் நாளில் 22 கோடி ரூபாய்… டாப் கியரில் செல்லும் ‘ட்யூட்’!

‘குட் பேட் அக்லி’ எங்களுக்குப் பெரிய லாபமில்லை… தயாரிப்பாளர் ஓபன் டாக்!

ஜூனியர் NTR & பிரசாந்த் நீல் படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு?

அடுத்த கட்டுரையில்
Show comments