Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சம்பளத்தை சொல்லி லைகாவுக்கு ஷாக் கொடுத்த அனிருத்!

சம்பளத்தை சொல்லி லைகாவுக்கு ஷாக் கொடுத்த அனிருத்!
, வியாழன், 3 நவம்பர் 2022 (16:42 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து அவர் லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிப்பார் என்று செய்திகள் கசிந்தது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த இரண்டு படங்களை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியுள்ளது.

இந்நிலையில் இந்த இரண்டு படங்களுக்கும் இசையமைக்க லைகா நிறுவனம் அனிருத்தை அனுகிய போது, 10 கோடி ரூபாய் சம்பளம் கேட்டு ஷாக் கொடுத்துள்ளாராம். தொடர்ந்து அவர் இசையமைக்கும் படங்கள் ஹிட் ஆகி வருவதால் அனிருத் இப்படி சம்பளத்தை ஏற்றியுள்ளதாக தெரிகிறது. இது சம்மந்தமாக இப்போது லைகா நிறுவனம் அனிருத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாட்டையால் அடித்துக் கொண்ட ராகுல்காந்தி