Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கந்தஷ்டி கவச விவகாரம்: ரஜினிகாந்த் டுவீட்

Advertiesment
கந்தஷ்டி கவச விவகாரம்: ரஜினிகாந்த் டுவீட்
, புதன், 22 ஜூலை 2020 (12:11 IST)
சமீபத்தில்,கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் சமீபத்தில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறான விமர்சனம் செய்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரம் குறித்து ஒருசில முக்கிய தலைவர்கள் தவிர மற்ற அனைவரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.
 
இந்த நிலையில் நேற்று பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், அண்ணன் ரஜினிகாந்த் பெரிய ஆன்மிகவாதி, அவர் கந்த சஷ்டி விவகாரத்தில் குரல் கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்
 
இந்த வேண்டுகோளை ஏற்ற எல்.முருகன் சற்றுமுன் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது கண்டனத்தையும் கருப்பர் கூட்டத்திற்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பாராட்டையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
 
கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து பல கோடி தமிழ் மக்களின் மனதை புண்படுத்தி, கொந்தளிக்கச் செய்த இந்த ஈனச்செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி, தவறு செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். இனிமேலாவது மதத் துவேஷமும் கடவுள் நிந்தனையும் ஒழியட்டும். ஒழியனும். எல்லா மதமும் சம்மதமே. கந்தனுக்கு அரோகரா!! என்று ரஜினி தனது டுவிட்டரில் கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலிவுட்டை விட்டு விலக முடிவெடுத்த பிரபலம் –டிவிட்டர் பதிவால் சர்ச்சை!