Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாஸ்க் எங்க தலைவரே? செல்ஃப் டிரைவ் செய்து ரஜினி சென்றது இங்குதானா?

Advertiesment
மாஸ்க் எங்க தலைவரே? செல்ஃப் டிரைவ் செய்து ரஜினி சென்றது இங்குதானா?
, செவ்வாய், 21 ஜூலை 2020 (14:58 IST)
ரஜினி காரை எடுத்துக்கொண்டு எங்கே சென்றார் என்ற தகவல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. 
 
கொரோனா காரணமாக சினிமாப் படப்பிடிப்புகள் சில மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.  இதனால் எல்லா நடிகர்களும் இந்தக் கொரொனா காலத்தில் வீட்டில் முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  
 
இந்நிலையில் அனைவரையும் போலவே வீட்டில் முடங்கி இருந்த ரஜினி, நேற்று சொகுசுக் காரான லாம்போர்கினியில் டிரைவர் இல்லாமல் தானே வெளியில் சென்று வந்துள்ளார். இந்த போட்டோ நேற்று வைரல் ஆனது. 
 
ஒவ்வொரு ஆடி அமாவசை தினத்தன்று தனது முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் பழக்கத்தை வைத்துள்ளவர் ரஜினிகாந்த். எனவே நேற்று ஆடி அமாவாசை என்பதால் திதி கொடுக்க வெளியே சென்றுள்ளார் என சமூக வலைத்தளங்களில் ரஜினி எங்கு சென்றிருப்பார் என யூகங்கள் வெளியானது. 
 
ஆனால் ரஜினி, கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு ஓய்வெடுக்க சென்றுள்ளார். அவருடன் சவுந்தர்யா அவரது கணவர் விசாகன் மற்றும் மகன் வேத் ஆகியோரும் சென்றுள்ளனர். இந்த புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
அதோடு சமூக வலைத்தளமான டிவிட்டரில் #Thalaivar என்ற ஹேஷ்டேக்குடன் இந்த புகைப்படம் பதிவிடப்பட்டு வருகிறது. இதில் சிலர் கார் விட்டு இறங்கியதும் மாஸ்கை கழற்றி வீசியாச்சா? என நக்கலாக கமெண்ட் செய்தும் வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பக்காவான லோகோ உடன் வெளியான பிக்பாஸ் 4 அதிகாரபூர்வ டீசர் ...!