அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் நேற்றுடன் படமாக்கப்பட்டு விட்டன. 
	
 
									
										
								
																	
	
	 
	சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வந்த திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்க இமான் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத்தில் நடந்து வந்த நிலையில் ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் படப்பிடிப்பு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. மேலும் ரஜினியின் அரசியல் அறிக்கையின் காரணமாகவும் படப்பிடிப்பு தொடங்குவதில் சுணக்கம் ஏற்பட்டது.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	இதையடுத்து இப்போது இறுதிகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் ரஜினியின் உடல்நிலையை முன்னிட்டும் கொரோனா பரவல் உச்சத்தில் இருப்பதாலும் அவரை யாரும் தொடவோ தேவையில்லாமல் கிட்ட செல்லவே படக்குழுவினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாம். 
	 
 
									
										
			        							
								
																	
	இந்நிலையில் ஐதராபாத்தில் முழு வேகத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு நடந்து வந்தது. இப்போது அங்கு காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன. தற்போது கிடைத்திருக்கும் செய்தி, ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் நேற்றுடன் படமாக்கப்பட்டு விட்டன. நயன்தாராவும் இந்த கடைசி ஷெட்யூல்டில் கலந்து கொண்டது முக்கியமானது.
	 
 
									
											
							                     
							
							
			        							
								
																	
	சென்னையில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சியின் டப்பிங் உடனடியாக தொடங்க உள்ளது. அதனை முடித்த பின் அடுத்த மாதம்  அவர் மருத்துவப் பரிசோதனைக்காக யுஎஸ் செல்லலாம் என்கின்றன செய்திகள்.