Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முடிந்தது அண்ணாத்த… சென்னை விரையும் ரஜினி!

முடிந்தது அண்ணாத்த… சென்னை விரையும் ரஜினி!
, செவ்வாய், 11 மே 2021 (08:42 IST)
அண்ணாத்த படத்தின் பெரும்பாலானக் காட்சிகள் ஐதராபாத்தில் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வந்த திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்க இமான் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத்தில் நடந்து வந்த நிலையில் ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் படப்பிடிப்பு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. மேலும் ரஜினியின் அரசியல் அறிக்கையின் காரணமாகவும் படப்பிடிப்பு தொடங்குவதில் சுணக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து இப்போது இறுதிகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் ரஜினியின் உடல்நிலையை முன்னிட்டும் கொரோனா பரவல் உச்சத்தில் இருப்பதாலும் அவரை யாரும் தொடவோ தேவையில்லாமல் கிட்ட செல்லவே படக்குழுவினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாம். இதனால் ஒரு பாடலைக் கூட படத்தில் இருந்து நீக்கியுள்ளதாம் படக்குழு.

இந்நிலையில் ஐதராபாத்தில் முழு வேகத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு நடந்து வந்தது. இப்போது அங்கு காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன. இதனால் ரஜினி இன்று தனி விமானத்தில் சென்னை புறப்படுவார் என சொல்லப்படுகிறது. இன்னும் சில காட்சிகளை கொல்கத்தாவில் படமாக்கப் படக்குழு ஆயத்தமாகி வருவதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருமணமா? அதை வாழ்நாளில் செய்யவே மாட்டேன்- முன்னணி நடிகை பதில்!