நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய அடுத்த படத்தின் சம்பளத்தை கணிசமாக குறைத்துள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.
ரஜினி நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளோடு சோலோவாக தீபாவளிக்குக் களமிறங்கியது. ஆனால் படத்தின் மோசமான விமர்சனங்களால் அடுத்தடுத்த நாட்களில் ரசிகர்கள் வருகைக் குறைய ஆரம்பித்தது. கொஞ்சம் நஞ்சம் வந்து கொண்டிருந்த ரசிகர்களையும் கடந்த வாரம் பெயத கனமழை சுத்தமாக நிறுத்தியது. ஆனாலும் பட நிறுவனம் மிகப்பெரிய வெற்றி என்பது போல் காட்டிக் கொண்டு இருக்கிறது.
ஆனால் உண்மையான கள நிலவரம் வேறு மாதிரியாக இருப்பது ரஜினியின் காதுகளுக்கு சென்றுள்ளது. இதனால் தன்னுடைய அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கே நடிக்க முடிவு செய்துள்ளாராம். மேலும் இந்த படத்துக்காக 30 சதவீதம் சம்பளத்தையும் குறைத்துக் கொள்ள உள்ளாராம்.