Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசியா அவர அப்ப பாத்தப்பவே எனக்கு நம்பிக்கை கொறஞ்சிடுச்சு… விஜயகாந்த் மறைவு குறித்து ரஜினிகாந்த் பேச்சு!

Webdunia
வெள்ளி, 29 டிசம்பர் 2023 (08:09 IST)
உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த்  சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலை இயற்கை எய்தினார். அவருக்கு வயது 71. அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டது. அவரது உடல் இன்று மாலை நல்லடக்கம் செயய்ப்படவுள்ளது.

இந்நிலையில் சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பொதுமக்கள் மற்றும் திரையுலகக் கலைஞர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் ரஜினிகாந்த் தன்னுடைய ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு சென்னை திரும்பியுள்ள ரஜினிகாந்த் தன்னுடைய அஞ்சலியை செலுத்தியுள்ளார்.

அதில் “என்னுடைய அன்பு நண்பர் விஜயகாந்தை இழந்திருப்பது நம்முடைய துரதிர்ஷ்டம். எப்படியும் தேறி வந்திடுவார்னு நெனச்சோம். ஆனால் சமிபத்துல அவர  தேமுதிக பொதுக் கூட்டத்துல பாத்தப்ப எனக்கு நம்பிக்கை கொறஞ்ச்டுச்சு. அசாத்தியமான மன உறுதி கொண்டவர். அவர் உடல்நலம் நல்லா இருந்திருந்தா அரசியல்ல மிகப்பெரிய சக்தியா உருவாகி இருப்பார். அந்த பாக்கியம் தமிழக மக்களாகிய நமக்கு கிடைக்கவில்லை. அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்” எனக் கூறியுள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ்ப் படத்துக்கு முதலில் நான்தான் இசையமைப்பாளர்… என்னை விரட்டிவிட்டார்கள்- சந்தோஷ் நாராயணன் ஜாலி பேச்சு!

கஞ்சா வியாபாரிகளோடு தொடர்பு? மன்சூர் அலிகான் மகன் கைது!

கலகலப்பு 3 படத்தில் நடிக்கப் போகும் நடிகர்கள் இவர்கள்தான்… வெளியான தகவல்!

சச்சினின் கைகளை விடாமல் பற்றிக்கொண்ட வினோத் காம்ப்ளே.. இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம்!

புஷ்பா இரண்டாம் பாகத்தோடு முடியாது… கடைசி நேரத்தில் படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments