Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 14 April 2025
webdunia

நடிகர் சங்க கட்டடத்துக்கு விஜயகாந்த் பெயரை வைக்கவேண்டும்… ரசிகர்களின் கோரிக்கை ஏற்கப்படுமா?

Advertiesment
விஜயகாந்த்
, வெள்ளி, 29 டிசம்பர் 2023 (07:54 IST)
உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த்  சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலை இயற்கை எய்தினார். அவருக்கு வயது 71. அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டது. அவரது உடல் இன்று மாலை நல்லடக்கம் செயய்ப்படவுள்ளது.

அதற்கு முன்பாக பொதுமக்கள் பார்வைக்காக அவரது உடல்  சென்னை தீவுத்திடலில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. விஜயகாந்தின் இந்தமறைவு திரைத்துறையினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விஜயகாந்த் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்து அந்த சங்கத்தின் கடன்களை எல்லாம் அடைத்து சங்கத்தை நிர்வாக சீர்திருத்தங்களை செய்து நல்ல நிலைக்கு கொண்டுவந்தார்.

இந்நிலையில் இப்போது நடிகர் சங்கத்துக்குப் புதிய கட்டடத்துக்கு விஜயகாந்த் பெயரை சூட்டவேண்டும் என சமூகவலைதளங்களில் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை நடிகர் சங்கம் ஏற்று விஜயகாந்த் பெயரை சூட்டுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திரையரங்கில் ஏமாற்றிய சலார்… அதனால் சீக்கிரமே ஓடிடி ரிலீஸா?