Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மலையாளத்தில் மட்டும் பெயர் மாற்றப்படுமா ரஜினியின் ஜெயிலர்?

மலையாளத்தில் மட்டும் பெயர் மாற்றப்படுமா ரஜினியின் ஜெயிலர்?
, திங்கள், 17 ஜூலை 2023 (09:04 IST)
ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தின் தோல்விக்குப் பிறகும், நெல்சன் பீஸ்ட் படத்தின் தோல்விக்குப் பிறகும் இணைந்துள்ள திரைப்படம் ஜெயிலர். இதனால் வழக்கமாக ரஜினிகாந்த் படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு இந்த படத்துக்கு இல்லை. ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் எனும் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்.

இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலும் நடித்துள்ளதால் கேரளாவிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இந்த படத்துக்கு உள்ளது. இந்நிலையில் மலையாளத்தில் ஏற்கனவே ஜெயிலர் என்ற பெயரில் ஒரு படம் உருவாகி வருவதால் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் பெயர் மாற்றம் செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சக்கிர் மாடத்தில் இயக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் தயன் ஸ்ரீனிவாசன் நடித்துள்ளார். ஜெயிலர் படத்தின் மலையாள ரிலீஸ் உரிமையை ஸ்ரீ கோகுலம் பிலிம்ஸ் நிறுவனத்தின் கோகுலம் கோபாலன் கைப்பற்றியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விரைவில் பாலிவுட்டில் அறிமுகமாகும் சிவகார்த்திகேயன்!