Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விரைவில் பாலிவுட்டில் அறிமுகமாகும் சிவகார்த்திகேயன்!

விரைவில் பாலிவுட்டில் அறிமுகமாகும் சிவகார்த்திகேயன்!
, திங்கள், 17 ஜூலை 2023 (08:29 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில்  உருவாகியுள்ள மாவீரன் திரைப்படம் ஜூலை 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. ஆனாலும் வசூலில் இந்த படம் சோடை போகவில்லை என தெரிகிறது. முதல்நாளில் தமிழகத்தில் மட்டும் 6.5 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படம் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் ரிலீஸாகியுள்ளது. சிவகார்த்திகேயனின் சமீபத்தைய படமான பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்ப்போடு தெலுங்கில் ரிலீஸாகி தோல்வி அடைந்தது. இந்நிலையில் இப்போது மாவீர்டு திரைப்படம் தெலுங்கில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தமிழ் தெலுங்கை அடுத்து சிவகார்த்திகேயன் அடுத்து பாலிவுட் படத்தில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான பேச்சுவார்த்தையை அவர் பாலிவுட்டில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தோடு தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயிலர் படத்தின் மலையாள ரிலீஸ் உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!