தெலுங்கு இயக்குனரோடுக் கைகோர்க்கும் ரஜினிகாந்த்!

vinoth
சனி, 17 மே 2025 (13:12 IST)
தன்னுடைய 73 ஆவது வயதிலும் ரஜினிகாந்த் பிஸியாக படங்களில் நடித்துவருகிறார். தனக்கு அடுத்தத் தலைமுறை நடிகர்களோடு இன்னமும் மார்க்கெட்டில் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார். தற்போது அவர் நடிப்பில் ‘கூலி’ மற்றும் ஜெயிலர் 2 ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன.

முதல் பாகத்தைப் போலவே  ஜெயிலர் இரண்டாம் பாகத்திலும் பல முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும் ரஜினிகாந்தின் நண்பருமான பாலகிருஷ்ணா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் ஜெயிலர் 2 திரைப்படம்தான் ரஜினிகாந்தின் கடைசிப் படமாக இருக்குமோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

ஆனால் அவர் அடுத்தடுத்து படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை ‘சூர்யாவின் சனிக்கிழமை’ என்ற படத்தை இயக்கிய விவேக் ஆத்ரேயா இயக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உலகளவில் முதல் நாளில் 22 கோடி ரூபாய்… டாப் கியரில் செல்லும் ‘ட்யூட்’!

‘குட் பேட் அக்லி’ எங்களுக்குப் பெரிய லாபமில்லை… தயாரிப்பாளர் ஓபன் டாக்!

ஜூனியர் NTR & பிரசாந்த் நீல் படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு?

பவன் கல்யாணை இயக்குகிறாரா லோகேஷ் கனகராஜ்?... கோலிவுட்டில் பரவும் தகவல்!

தீபாவளி ரேஸில் முந்தியது யார்? டியூட், பைசன், டீசல் முதல் நாள் வசூல் விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments