தன்னுடைய 73 ஆவது வயதிலும் ரஜினிகாந்த் பிஸியாக படங்களில் நடித்துவருகிறார். தனக்கு அடுத்தத் தலைமுறை நடிகர்களோடு இன்னமும் மார்க்கெட்டில் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார். தற்போது அவர் நடிப்பில் கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன.
முதல் பாகத்தைப் போலவே ஜெயிலர் இரண்டாம் பாகத்திலும் பல முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும் ரஜினிகாந்தின் நண்பருமான பாலகிருஷ்ணா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் ஜெயிலர் 2 திரைப்படம்தான் ரஜினிகாந்தின் கடைசிப் படமாக இருக்குமோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
இதுபற்றி சமீபத்தில் பேசியுள்ள லதா ரஜினிகாந்த் “சூப்பர் ஸ்டார் ஓய்வு பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. அவர் ஜெயிலர் 2 படத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பார் என்றுதான் நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.