Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா: தேதியை அறிவித்த சன்பிக்சர்ஸ்..!

Webdunia
சனி, 22 ஜூலை 2023 (11:30 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் தேதியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. 
 
ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூலை 28ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் ரஜினிகாந்த் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
ஏற்கனவே இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி  சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் மற்ற பாடல்களும் இந்த இசை வெளியீட்டு விழாவில் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, உட்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் நெல்ச்சன் இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபல இயக்குனருக்கு இப்படி ஒரு நோயா? – நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படுத்திய கரண் ஜோஹர்!

இன்று ‘தல’ தோனி பிறந்தநாள்! சல்மான் கானோடு கொண்டாடிய தோனி! - வைரலாகும் வீடியோ!

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸ்களில் திவ்யா துரைசாமி… லேட்டஸ்ட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

யாருக்காக ஓடுகிறதோ இல்லையோ… இவருக்காக இந்தியன் 2 ஓடவேண்டும்- சித்தார்த் நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments