Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உம்மன்சண்டிக்கு எதுக்கு 3 நாள் துக்கம்.. ஃபேஸ்புக்கில் சர்ச்சை பதிவிட்ட ‘ஜெயிலர்’ பட நடிகர்..!

உம்மன்சண்டிக்கு எதுக்கு 3 நாள் துக்கம்.. ஃபேஸ்புக்கில் சர்ச்சை பதிவிட்ட ‘ஜெயிலர்’ பட நடிகர்..!
, வெள்ளி, 21 ஜூலை 2023 (13:17 IST)
முன்னாள் கேரள முதலமைச்சர் உம்மன்சண்டி சமீபத்தில் காலமான நிலையில் அவருடைய மறைவிற்கு கேரளா அரசு 3 நாள் துக்கம் அனுசரித்தது 
 
இந்த நிலையில் நேற்று அவரது உடல் இறுதி மரியாதை செய்யப்பட்ட நிலையில் ஏராளமான அரசியல் பிரபலங்கள் திரையுலக பிரபலங்கள் அதில் கலந்து கொண்டனர் 
 
இந்த நிலையில் ’ஜெயிலர்’ படத்தில் முக்கிய கேரக்டரில் அடித்துள்ள நடிகர் விநாயகன் தனது பேஸ்புக்கில் உம்மன் சண்டி குறித்து சர்ச்சை பதிவு ஒன்றை செய்துள்ளார் 
 
அதில் அவர் உம்மன்சண்டி யார்? எதற்காக மூன்று நாள் அரசு துக்கம் விசாரிக்கணும்? ஊடகங்கள் அவரது இறுதி ஊர்வலத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்குது? அவர் நல்லவர் என்று நீங்க நினைச்சா நான் என்ன பண்ண முடியும்’ என்று பதிவு செய்துள்ளார் 
 
இதனை அடுத்து நடிகர் விநாயகன் மீது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கையில் UPI பரிவர்த்தனை: ரணில் விக்கிரமசிங்கே - பிரதமர் மோடி ஒப்பந்தம்.!