Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினிகாந்த் பட இசையமைப்பாளர் காலமானார்!

Advertiesment
vijay anand music composer

Sinoj

, புதன், 7 பிப்ரவரி 2024 (13:04 IST)
பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் இன்று காலமானார். அவருக்கு வயது 71 ஆகும்.

கன்னட சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆனத் தமிழ் சினிமாவில் கடந்த 1984 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் விசு இயக்கத்தில் வெளியான படம் நாணயம். இப்படத்திற்கு விஜய் ஆனந்த் இசையமைத்திருந்தார்.

இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்று ஹிட்டானது.

இதையடுத்து, ரஜினிகாந்தின் நான் அடிமை இல்லை, சட்டம் ஒரு இருட்டறை  உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட தமிழ் படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

கன்னட சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த விஜய் ஆனந்த் நேற்று (பிப்ரவரி 6 ஆம் தேதி) மாலை சென்னையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு சினிமாத்துறையினர், ரசிகர்கள் இரங்கல் கூறி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“வாங்க இங்கிட்டு போதும்…”- விஜய் அரசியல் குறித்து வடிவேலு அளித்த பதில் இதுதான்!