Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நெல்சனுக்கு முன்னுரிமை கொடுக்கும் ரஜினிகாந்த்…. விரைவில் நல்ல செய்தி!

நெல்சனுக்கு முன்னுரிமை கொடுக்கும் ரஜினிகாந்த்…. விரைவில் நல்ல செய்தி!
, வெள்ளி, 14 ஜனவரி 2022 (10:15 IST)
ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய இரண்டு படங்களின் வெற்றி அவரை இப்போது விஜய் படத்தின் இயக்குனராக்கியுள்ளது. இப்போது அவர் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து அவர் ரஜினியை வைத்து படம் இயக்க உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வெளியாகின.

ஆனால் அதை நெல்சன் தரப்பு உறுதிப்படுத்தவில்லை. அதுமட்டுமில்லாமல் அவர் பீஸ்ட் படத்தை இயக்கி முடிக்கவே இன்னும் சில மாதங்கள் ஆகும். இந்நிலையில் அண்ணாத்த படத்தின் கலவையான விமர்சனம் மற்றும் வசூல் தோல்வியால் அடுத்த படத்தை தேர்வு செய்வதில் ரஜினி அதிக அக்கறை செலுத்துவதாக சொல்லப்படுகிறது. பல இயக்குனர்கள் ரஜினிக்கு கதை சொல்லி இருந்தாலும், நெல்சனுக்கு ரஜினி அவர் முக்கியத்துவம் கொடுப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் நெல்சனுக்கே ரஜினி படத்தினை இயக்க அதிக வாய்ப்புள்ளதாக சொல்லபடுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக்பாஸ் பிரியங்காவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் அனுமதி!