Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தாதா சாகேப் விருது பெற்ற அமிதாப்புக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

Advertiesment
தாதா சாகேப் விருது பெற்ற அமிதாப்புக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!
, செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (22:01 IST)
திரைப்படத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது  பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் அவர்களுக்கு வழங்கவிருப்பதாக சற்றுமுன் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் அறிவித்தார். அமிதாப் பெயர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், திரைப்படத்துறையில் செய்த சாதனைகளுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாகவும் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அமிதாப்பச்சனுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
 
ஏற்கனவே இந்திய திரையுலகில் சிவாஜி கணேசன், ராஜ்குமார், திலீப்குமார், கே.பாலசந்தர், ஆஷா போன்ஸ்லே, தேவ் ஆனந்த், அடூர் கோபாலகிருஷ்ணன், சசிகபூர், கே.விஸ்வநாத், வினோத்கண்ணா உள்பட பலர் இந்த உயரிய விருதினை பெற்றுள்ள நிலையில் தற்போது இந்த பட்டியலில் அமிதாப் அவர்களும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
இந்த நிலையில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். பெரும் மதிப்பிற்குரிய  தாதா சாகேப் பால்கே விருதுக்கு  பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தகுதியானவர் என்றும் அவர் தனது டுவிட்டில் குறிப்பிட்டுள்ளார். இந்த டுவீட் பதிவு செய்த ஒருசில நிமிடங்களில் ஆயிரக்கணக்கில் லைக்ஸ்களும் ரீடுவீட்டுக்களும் குவிந்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அப்னா டைம் ஆயேகா! ஆஸ்கர் வெல்வான் கல்லி பாய்! – மகிழ்ச்சியில் அலியா பட்!