Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூப்பர் ஸ்டார் ‘அமிதாப் பச்சனுக்கு’ திரைத்துறையின் ’உயரிய விருது’ : மத்திய அமைச்சர் அறிவிப்பு

Advertiesment
சூப்பர் ஸ்டார் ‘அமிதாப் பச்சனுக்கு’ திரைத்துறையின் ’உயரிய விருது’ : மத்திய அமைச்சர் அறிவிப்பு
, செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (19:51 IST)
திரைப்படத்துறையில் சாதனை செய்தவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் பால்கே ஆகும்.  இன்று, மத்தியஅரசு பிரபல நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்திய சினிமாத் துறையில் மிக உயரிய விருதாக கருதப்படுவது தாதா சாகேப் பால்கே விருது ஆகும். சினிமாத் துறையில் சாதனை செய்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. 
 
கடந்த 1996 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகர்  திலகமாக போற்றப்பட்டும் சிவாஜிக்கு தாதா சாகேப் பல்கே விருது வழங்கப்பட்டது, அதேபோல் கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குநர் சிகரம் என்றழைக்கபடும் இயக்குநர் பாலச்சந்தருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.
 
இந்த நிலையில் இன்று, பாஜகவின் மத்திய அரசு, திரைத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு ஹிந்தி சூப்பர் ஸ்டார் மற்றும் பல நடிகர்களின் ரோல் மாடலாக இருக்கும் நடிகர் அபிதாப்பச்சனை ஒருமனதாக தேர்வு செய்துள்ளது.
webdunia
இந்த தகவலை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குட்டியை எடுக்க முயன்ற குழந்தை.. கடிக்காமல் விட்ட நாய் - வைரல் வீடியோ