சுப்ரமணியபுரம் படம் மூலமாக நடிகராகவும் இயக்குனராகவும் அறிமுகமானவர் சசிகுமார். அந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு அவர் நடிகராக தனது பாதையைத் தேர்வு செய்துகொண்டார். தொடர்ந்து வெற்றிப் படங்கள் கொடுத்த அவர் ஒரு கட்டத்தில் கடன் பிரச்சனைகளால் தேய்வழக்கான படங்களைக் கொடுக்க ஆரம்பித்து தோல்விப் பாதைக்குத் திரும்பினார்.
இதையடுத்து தற்போது அயோத்தி, நந்தன் மற்றும் டூரிஸ்ட் பேமிலி என மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பியுள்ளார். நேற்று ரிலீஸாக இருந்த அவரின் ஃப்ரீடம் திரைப்படம் பொருளாதார சிக்கல் காரணமாக ரிலீஸாகவில்லை.
இந்த படத்தின் ப்ரமோஷனுக்காக பல பேட்டிகளை அளித்த சசிகுமார் ரஜினிகாந்த் தனக்கு அளித்த ஒரு அறிவுரை குறித்து பேசியுள்ளார். அதில் “ரஜினி சார் என்னிடம் ஒவ்வொரு படத்துக்கும் அட்வான்ஸ் வாங்கும்போது எதாவது ஒரு இடத்தை வாங்குங்கள். பின்னர் அதை மறந்துவிடுங்கள். பின்னர் எப்போதாவது நீங்கள் ஒரு இக்கட்டில் இருக்கும்போது அது உதவும் என்றார். ஆனால் நான் அந்த அட்வைஸைக் கேட்கவில்லை.” எனப் பேசியுள்ளார்.