பிரபல பாடலாசிரியர் நா முத்துக்குமார் 1500க்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்களை எழுதி தமிழ் சினிமாவில் முன்னணிக் கவிஞராகத் திகழ்ந்தார். தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் தேசிய விருதுகள் வென்ற பாடல் ஆசிரியர் என்ற பெருமைக்கு சொந்த்க்காரர். தனது 41 ஆவது வயதிலேயே கடந்த 2016 ஆம் ஆண்டு உடல்நல கோளாறு காரணமாக மரணமடைந்தார் அவரது மரணம் இளம் இயக்குனர்கள் மற்றும் இசை அமைப்பாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு அவரின் பொன்விழா ஆண்டு என்பதால் ஜூலை 19 ஆம் தேதியன்று அவரது நினைவைப் போற்றும் வகையில் இசை நிகழ்ச்சியைத் தமிழ்த் திரையுலகம் நடத்தவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு ஆனந்த யாழை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று ஐம்பதாவது பிறந்தநாள் நினைவுகூறப்பட்டு வருகிறது. அவரின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் அவரின் புகைப்படம் மற்றும் பாடல் வரிகளைப் பகிர்ந்து அவரின் நினைவைப் போற்றி வருகின்றனர்.