சப் டைட்டிலில் ஒலிக்குறிப்புகளோடு வெளியாகிறது வேட்டையன் திரைப்படம்.. லைகா நிறுவனம் அறிவிப்பு!

vinoth
புதன், 9 அக்டோபர் 2024 (07:31 IST)
ஜெயிலர் என்ற சூப்பர் ஹிட் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கிய வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர. அனிருத் இசையமைக்க, எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சமீபத்தில் டீசர், பாடல்கள் மற்றும் டிரைலர் ஆகியவை வெளியாகிக் கவனம் ஈர்த்துள்ளன. படம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. படத்துக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கி பெரும்பாலானக் காட்சிகளுக்கு டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துள்ளன..

இந்நிலையில் வேட்டையன் பற்றி ஒரு தகவலை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி வேட்டையன் படத்தின் சப் டைட்டிலில் பின்னணி ஒலிகளுக்கான விவரணைகளும் இடம்பெறும் என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் செவித்திறன் குறைபாடு உடைய பார்வையாளர்கள் படத்தை முழுமையாக உணர முடியும்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Lyca Productions (@lycaproductions)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிருனாள் தாக்கூரின் கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் அசத்தல் புகைப்படத் தொகுப்பு!

அஜித்தின் அடுத்த பட இயக்குனர் லிஸ்ட்டில் இணைந்த மனு ஆனந்த்?

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ‘டாக்ஸிக்’ படக்குழு!

எனக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது… ஜாய் கிரிசில்டா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments