Webdunia - Bharat's app for daily news and videos

Install App

27 ஆண்டுகள் போராடி தன்னுடைய நிலத்தைப் பெற்றார் கவுண்டமணி!

vinoth
புதன், 9 அக்டோபர் 2024 (07:24 IST)
தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக இருப்பவர் கவுண்டமணி. இடையில் சில ஆண்டுகள் படம் நடிக்காமல் இருந்த கவுண்டமணி தற்போது ‘ஒத்த ஓட்டு முத்தையா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இந்நிலையில் கவுண்டணி 26 ஆண்டுகளாக நடத்தி வந்த ஒரு வழக்கில் அவருக்கு சொந்தமான இடம் அவரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கவுண்டமணி, 1996-ம் ஆண்டு நளினி பாய் என்பவருக்குச் சொந்தமாக சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் இருந்த நிலத்தை  வாங்கி அதில் ஒரு வணிக வளாகத்தைக் கட்ட திட்டமிட்டார். அதற்காக ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் என்ற நிறுவனத்திடம் கட்டடம் கட்டும் பணியை ஒப்படைத்தார். இந்த பணிக்காக 3 கோடியே 58 லட்சம் ரூபாய் பணம் ஒப்பந்தமாகப் போடப்பட்டுள்ளது.

ஆனால் இதற்கான பணம் முழுவதையும் கட்டிய பின்னரும் கட்டுமான நிறுவனம் கட்டடத்தை கட்டும் பணியை தொடங்கவேயில்லை என கவுண்டமணி சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கு விசாரணையில் 46 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே கட்டட பணிகள் நிறைவடைந்துள்ளதாக கண்டறியப்பட்டது.

இதையடுத்து இடத்தை கவுண்டமணியிடம் ஒப்படைக்க வேண்டும். 2008 ஆம் ஆண்டு முதல் மாதம் ஒன்றுக்கு இழப்பீடாக ஒரு லட்சம் ரூபாய் தரவேண்டுமென உத்தரவிட்டது நீதிமன்றம். இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது கட்டுமான நிறுவனம். இதையடுத்து அந்த வழக்கு விசாரணை முடிந்து கடந்த மார்ச் மாதம் கவுண்டமணிக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது அனைத்து நடைமுறைகளும் முடிந்து கவுண்டமணி வசம் அவர் நிலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சின்னகுஷ்பூ ஹன்சிகாவா இது… இலியானா போல ஒல்லி லுக்கில் கலக்கல் போட்டோஷூட்!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் கிளாமரஸ் போட்டோஷூட்!

குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவுதானா?... வெளியான தகவல்!

நமக்குள்ள ஏன் இவ்வளவு இடைவெளின்னு சூர்யா கேட்டார்… பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!

உடைமாற்றும்போது அத்துமீறி கேரவனுக்குள் வந்த இயக்குனர்- பிரபல நடிகை குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments