‘வேட்டையன்’ ரஜினி சாருக்காக பண்ணப்பட்ட கதையில்லை… இயக்குனர் ஞானவேல் பதில்!

vinoth
வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (15:17 IST)
ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர. அனிருத் இசையமைக்க, எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் டீசர் வெளியாகிக் கவனம் ஈர்த்தது.

படம் பற்றி பேசியுள்ள இயக்குனர் ஞானவேல் “படத்தில் ரஜினிகாந்த் என்கவுண்ட்டர் போலீஸாக நடிப்பது உண்மைதான். அவர் ஏன் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக மாறினார், அதற்கான காரணம் என்ன என்பதைப் படத்தில் காட்டியுள்ளோம்” எனப் பேசியுள்ளார்.  இந்நிலையில் முன்னணி ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் ரஜினிகாந்த் வேட்டையன் படத்துக்குள் வந்தது எப்படி என்று பேசியுள்ளார்.

அதில் “நான் ரஜினி சாரிடம் ஒரு கதையை சொல்லி, அவரைக் கவரணும் என இந்தக் கதையை அவரிடம் கொண்டு செல்லவில்லை. நான் சொல்ல நினைத்த ஒரு கதைக்கு ரஜினி சார் ராக்கெட் மாதிரி வந்தார். நாம் ஒரு அம்புவிட்டால் அது கொஞ்ச தூரம்தான் போகும். அதுவே ராக்கெட் லான்ச்சரை அனுப்பினால் எவ்வளவு தூரம் போகும்” எனப் பேசியுள்ளார். வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படத்துக்கு நல்ல வரவேற்பு உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அஜித் படத்தை மீண்டும் இயக்குகிறாரா சிறுத்தை சிவா? மலேசியாவில் திடீர் சந்திப்பு..!

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

அடுத்த கட்டுரையில்
Show comments