Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யோகி காலில் விழுந்த ரஜினி.. கலாய்க்கும் நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த ரஜினி ரசிகர்கள்..!

Advertiesment
Yogi Adityanath
, ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2023 (08:48 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று உத்தரபிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்ததை  பல நெட்டிசன்கள் கிண்டல் அடித்து கேலி செய்து வரும் நிலையில் அவர்களுக்கு ரஜினி ரசிகர்கள் தரப்பில் இருந்தும் இந்து மத ஆதரவாளர்கள் தரப்பில் இருந்தும் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது 
 
 யோகி ஆதித்யநாத் ஒரு அரசியல்வாதி மற்றும்  முதலமைச்சர் மட்டுமின்றி அவர் இந்து மத துறவி. கோரக்நாத் என்ற மடத்தில் மடாதிபதியாக இருந்தவர். இந்து மதத்தைப் பொறுத்தவரை சிறுவயதினராக மடாதிபதிகள் இருந்தாலும் அவர்களது காலில் விழுந்து வணங்குவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் தான் ஒரு இந்து மத துறாவி என்ற வகையில் தான் ரஜினிகாந்த் யோகி ஆதித்தினால் காலில் விழுந்து வணங்கி உள்ளார் 
 
ஆனால் இந்து மதம் குறித்து தெரியாத தற்குறிகள் மற்றும் ரஜினி மீது மனதில் வன்மம் வைத்துள்ளவர்கள் மட்டுமே இந்த நிகழ்வை  கேலி செய்து சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகின்றனர் என ரஜினி ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளனர் 
 
சாய்பாபா காலில் விழுந்த திராவிட அரசியல்வாதிகள் குறித்து ரஜினியை விமர்சனம் செய்தவர்கள் எதுவும் சொல்ல மாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்கு ரஜினி சொல்வதை, செய்வதை மட்டுமே விமர்சனம் செய்து விளம்பரம் தேடி கொள்ளும் ஜென்மங்கள் எனவும் ரஜினி ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யார் சூப்பர் ஸ்டார்… பட விழாவில் சத்யராஜ் சொன்ன கருத்து!