Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு வருடம் கழித்துதான் அரசியல், சினிமா எல்லாம்: ரஜினியின் அதிரடி

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (20:58 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ’அண்ணாத்த’ திரைப் படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் கொரோனா வைரஸ் பிரச்சினை முடிந்ததும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் கூறப்பட்டது 
 
அதே போல் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்பு அவர் அரசியல் கட்சி தொடங்குவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது 
 
இந்நிலையில் ரஜினிக்கு நெருக்கமான ஒருவர் கூறிய தகவலின் படி கொரோனா வைரஸ் பிரச்சினை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு முடிய வாய்ப்பு இல்லை என்று ரஜினி கருதுவதாகவும், எனவே அதுவரை அரசியல் மற்றும் சினிமாவில் இருந்து தான் ஒதுங்கி இருக்க போவதாகவும் அவர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது
 
இதனால் இன்னும் இரண்டு வருடம் கழித்து அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அதே போல் கட்சி ஆரம்பிப்பதற்கும் இன்னும் இரண்டு வருடம் ஆகும் என்று ரஜினி முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் ரஜினி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments