Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரஜினியின் அடுத்த பட டைட்டில் "அண்ணாத்த".... வந்திறங்கியது அசத்தலான அப்டேட்!

Advertiesment
ரஜினியின் அடுத்த பட டைட்டில்
, திங்கள், 24 பிப்ரவரி 2020 (18:10 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் தலைவர் 168 படத்தில்  நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக மீனா மற்றும் குஷ்பு நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினிக்கு மகள் அல்லது தங்கை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
டி இமான் இசையில் உருவாகும் இந்த படத்தில் சதிஷ், சூரி, பிரகாஷ் ராஜ், உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இதற்கிடையில் அண்மையில் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது. அண்மையில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் தொடங்கவுள்ளது. தற்காலிகமாக தலைவர் 168 என அழைக்கப்பட்டு வந்த இப்படத்தின் டைட்டில் மற்றும் cast and crew குறித்த அப்டேட் சற்றுமுன் வெளியாகியுள்ளது. 
 
இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிச்சர்ஸ் நிறுவனம் தனது  ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக "அண்ணாத்த" என்ற இப்படத்தின் டைட்டிலை அறிவித்துள்ளனர்.  இந்த அப்டேட் ரஜினி ரசிகர்களை உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினி ரசிகர்களை அலார்ட் செய்த சன் பிச்சர்ஸ் - தலைவர் 168 படத்தின் அப்டேட் குறித்த தகவல்!