Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினி ரசிகர்களை அலார்ட் செய்த சன் பிச்சர்ஸ் - தலைவர் 168 படத்தின் அப்டேட் குறித்த தகவல்!

ரஜினி ரசிகர்களை அலார்ட் செய்த சன் பிச்சர்ஸ் - தலைவர் 168 படத்தின் அப்டேட் குறித்த தகவல்!
, திங்கள், 24 பிப்ரவரி 2020 (16:39 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் புதுப்படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தற்காலிகமாக தலைவர் 168 என அழைக்கப்படும் இப்படத்தின் டைட்டில் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
ரஜினிக்கு ஜோடியாக மீனா மற்றும் குஷ்பு நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினிக்கு மகள் அல்லது தங்கை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.  டி இமான் இசையில் உருவாகும் இந்த படத்தில் சதிஷ், சூரி, பிரகாஷ் ராஜ், உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இதற்கிடையில் அண்மையில் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது. 
 
அண்மையில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் தற்போது சூப்பர் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது இன்று மாலை 6 மணிக்கு தலைவர் 168 படத்தின் அப்டேட்  வெளியாகும் என ட்விட்டரில் #Thalaivar168 என்ற ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கர்ணன் படப்பிடிப்பு தளத்திலிருந்து தாறுமாறான அப்டேட் கொடுத்த தனுஷ்!