Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உக்ரைன் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் ஜூனியர் என் டி ஆர் & ராம் சரண்!

உக்ரைன் படப்பிடிப்பில் கலந்துகொள்ளும் ஜூனியர் என் டி ஆர் & ராம் சரண்!
, புதன், 11 ஆகஸ்ட் 2021 (16:45 IST)
ஆர் ஆர் ஆர் படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி ரிலீஸாகி வரவேற்பைப் பெற்றது.

தென்னிந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனராக உருவாகியுள்ள ராஜமௌலி பாகுபலி படத்துக்குப் பிறகு ராம் சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் , அஜய் தேவ்கான் மற்றும் ஆலியா பட் ஆகியோரை வைத்து ஆர் ஆர் ஆர் என்ற வரலாற்றுப் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஆலியா பட் மற்றும் ஹாலிவுட் நடிகை ஒருவர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் அஜய் தேவ்கான் சம்மதித்துள்ளார். இந்நிலையில் படத்தின் பெரும்பகுதிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் இன்னும் சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டியுள்ளது. இந்த படத்துக்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ளார்.

ஆகஸ்ட் 1 ஆம் தேதி இந்த படத்தின் முதல் பாடலான நட்பு 5 மொழிகளில் வெளியாகி கவனிப்பைப் பெற்றது. இந்நிலையில் அந்த பாடலின் காட்சிகள் இப்போது உக்ரைனில் படமாக்கப்பட்டு வருகின்றன. அதில் படத்தின் நாயகர்களான ராம்சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கணவரோடு சுவலட்சுமி இருக்கும் புகைப்படம்… இணையத்தில் வைரல்!