Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராஜமெளலியின் ’’ஆர்.ஆர்.ஆர் ‘’பட ரிலீஸ் தேதி அறிவிப்பு...மகிழ்ச்சியில் ரசிகர்கள்

ராஜமெளலியின் ’’ஆர்.ஆர்.ஆர் ‘’பட ரிலீஸ் தேதி அறிவிப்பு...மகிழ்ச்சியில் ரசிகர்கள்
, சனி, 2 அக்டோபர் 2021 (18:28 IST)
ராஜமௌலி இயக்கும் ஆர் ஆர் ஆர் படத்தின் ரிலீஸை இந்திய சினிமாவே ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனராக உருவாகியுள்ள ராஜமௌலி பாகுபலி படத்துக்குப் பிறகு ராம் சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் , அஜய் தேவ்கான் மற்றும் ஆலியா பட் ஆகியோரை வைத்து ஆர் ஆர் ஆர் என்ற வரலாற்றுப் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஆலியா பட் மற்றும் ஹாலிவுட் நடிகை ஒருவர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் அஜய் தேவ்கான் சம்மதித்துள்ளார். இந்நிலையில் படத்தின் பெரும்பகுதிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் இன்னும் சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டியுள்ளது.

இந்த படத்தை இந்த ஆண்டு ஜனவரி மாதமே ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அக்டோபர் மாதம் ரிலிஸ் தள்ளிவைக்கப்பட்டது. ஆனால் கொரோனா இரண்டாம் அலையால் மீண்டும் பட ரிலீஸ் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது பின் தேதி குறிப்பிடாமல் படத்தின் ரிலீஸை தள்ளி வைப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில், ராஜமெளலி இயக்கதிதில், ஜூனியர் என்.டி.ஆர்- ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள  ஆர்.ஆர்.ஆர் படம் வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகும் எனப் படக்குழு ஆறிவித்துள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் சேதுபதி ரூ.1 கோடி நன்கொடை! குவியும் பாராட்டு